விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான “கட்டா குஸ்தி’ முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய நடிகை மோக்ஷா, “கட்டா குஸ்தி 2′ திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. இதற்காக அனைவருக்கும் என் நன்றிகள். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஒரே இரவில் மோக்ஷாவாக இருந்த என்னை ‘மீனு மிஸ்’ என்ற கதாபாத்திரமாக மாற்றி, இந்த அளவிற்குப் பிரபலமாக்கியது இன்னும் என் கற்பனைக்கும் சிந்தனைக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கிறது.