GSLV-F18 ஏவுதல் வெற்றி: NavIC-ஐ வலுப்படுத்தும் NVS-03 செயற்கைக்கோள்|India’s Own GPS Gets a Boost! ISRO Launches NVS-03

Spread the love

விண்ணில் பாய்ந்தது GSLV-F18; துல்லியமான வழிகாட்டி சேவைகளுக்கு புதிய முன்னேற்றம்!

இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்தும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் திட்டமிட்ட புவிமாற்றச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

NVS-03 என்பது இரண்டாம் தலைமுறை NVS செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான NavIC-இன் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.

இந்தச் செயற்கைக்கோளின் முக்கிய சிறப்பம்சம், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அணு கடிகாரம் (Atomic Clock) ஆகும். செயற்கைக்கோளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கும், நேரத்தை மிகச் சரியாகக் கணிப்பதற்கும் அணு கடிகாரம் உதவுகிறது.

மேலும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் L5 மற்றும் S அலைவரிசைகளுடன், புதிதாக L1 அலைவரிசையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீன ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களுடன் NavIC இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *