ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், ” நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
சுப்மன் கில் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவர் ஆடிய விதம் எங்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கியது.