Held in ‘Digital Arrest’ for Two Weeks: 73-Year-Old Man Realizes He Was Scammed of ₹8 Crore After Police Alert-2 வாரம் டிஜிட்டல் கைது: போலீஸார் உஷார் செய்த பிறகு ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

Spread the love

அழைத்தவர் தன்னை டெல்லி போலீஸ்துறையைச் சேர்ந்த ராகுல் குப்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க எனது ஆதார் அட்டை விவரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், வாட்ஸ்அப் மூலமாகவே கைது வாரண்ட் அனுப்பப்போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் நான் பயந்துபோனேன். கடந்த 18ம் தேதி சைபர் பிரிவு அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து நான் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளாகியிருப்பதாக கூறியபோதுதான், நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்,”என்று குறிப்பிட்டுள்ளார். இம்மோசடி குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி கூறுகையில், ”ஒரு சாதாரண அழைப்பாகத் தொடங்கி சம்பந்தப்பட்ட நபரை விரைவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலமணி நேரம் சட்டரீதியான அச்சுறுத்தல்கள் கொடுக்கின்றனர்.

புகார்தாரரை அச்சுறுத்தும் வகையில், அமலாக்கத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான போலியான ஆவணங்களை மோசடிக்காரர்கள் அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன், அவர் எங்கே இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவ்வப்போது அவரைத் தொடர்புகொண்டு பேசவும் செய்தனர். பின்னர், டெல்லி சைபர் காவல் நிலையத்தைச் சேர்ந்த நிஷா படேல் என்பவர் அவரைத் தொடர்புகொண்டு, வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதால், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், சரிபார்ப்புக்காக அவரது அனைத்து மியூச்சுவல் ஃபண்ட், வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிக் கணக்கு இருப்புகள் ஆகியவற்றைத் தாங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த மோசடிக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போன்ற போலியான ஆவணம் ஒன்றையும் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்”என்று தெரிவித்தார்.

புகார்தாரர் ஜூலை 7 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்த பல்வேறு தனியார் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ. 7.9 கோடியை இரண்டு வார டிஜிட்டல் கைதின் போது ஆறு தவணைகளாக மாற்றியுள்ளார். அந்த ரூ. 7.9 கோடியை மீட்டெடுக்கும் நடவடிக்கையை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *