Hello Kadhal: ” ‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான்!” – நடிகர் ஆர்யா |actor-arya-at-hello-kadhal-pre-release-event

Spread the love

அந்த வகையில் நான் பெரிதும் மிஸ் பண்ணுவது மறைந்த இயக்குநர் ஜீவா சாரைத்தான். ஜீவா சார் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் ‘உள்ளம் கேட்குமே’ போல ஒரு 10 படங்கள் செய்திருப்பேன்.

நடிகர் ஷாமும்கூட இதைத்தான் அடிக்கடி சொல்வார். ஜீவா சார் இருந்திருந்தால் தமிழ் சினிமாவுக்குப் புதியதாக 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்.

அதேபோல் நிறைய அழகான படங்களையும் கொடுத்திருப்பார். ஒரு படப்பிடிப்பிற்காக நான் கேரளா சென்றிருந்தபோது, ‘இயக்குநர் நிகில் ஒரு கதை வைத்திருக்கிறார், கேளுங்கள்’ என்று பரிந்துரைத்தார்கள்.

விமான நிலையத்திற்குச் செல்ல இரண்டு மணி நேரம் இருந்ததால், ‘சரி, சும்மா கேட்போமே’ என்றுதான் கதையைக் கேட்டேன். ஆனால், அந்தக் கதையின் ஐடியா மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

அதன்பிறகுதான் நிகில் இயக்கிய ‘பிரணய விலாசம்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அது ஒரு மிக அழகான படம். உடனே இந்தப் படத்தை நிச்சயம் பண்ண வேண்டும் என முடிவு செய்தேன்.

மலையாளத்தில் சுனு மற்றும் ஜோதிஷ் இந்தக் கதையை எழுதியிருந்தார்கள். தமிழில் இயக்குநர் ஹலிதா ஷமீமிடம் கேட்டேன்.

அவரும் தமிழ் வசனங்களை எழுதிக் கொடுத்தார். ‘ராஜா ராணி’ திரைப்படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இப்போதுதான் ஒரு மென்மையான திரைப்படத்தில் நடிக்கிறேன்” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *