‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள V.O சிதம்பரம் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr.M. ரவி IPS, (DGP முன்னாள் காவல் ஆணையர் தாம்பரம் காவல் ஆணையரகம்) சிறப்புரை ஆற்ற இருக்கிறார். அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் – King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.
இந்நிலையில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டியது குறித்து பேசிய ரவி, “தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் முதலில் தன்னைப் பற்றியும், சுற்றுப்புறங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக தினந்தோறும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்.

இந்த செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் நாட்டு நடப்புகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும். மூன்றாவதாக ஒரு விஷயத்தை பகுப்பாய்ந்து முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. நான்காவதாக தனது கம்யூனிகேஷன் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஆங்கில சேனலில் உள்ள டிபேட் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும்” என்றார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.