கோவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் நானா படேகர் கலந்து கொண்டு பேசுகையில், கோவா முதல்வரின் செயல்பாட்டை வெகுவாக புகழ்ந்து பேசினார். அப்போது எல்லோரும் என்றாவது ஒரு நாள் (இறந்து) போக வேண்டும். நான் நாளை இங்கு இருப்பேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் இறுதியில் அந்த நிலையை அடையும். ஆனால் அது நிகழும் முன், நான் என்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்ய முடியுமா?” என்று பேசினார். அவர் பேசிய 4 நாட்களில் அவர் கோவாவிலேயே இறந்து போனார்.
பாலிவுட் இரங்கல்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”நானாஜியின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. நடிக்கவைக்க அதிகம் செய்யத் தேவையில்லாத அபூர்வ நடிகர்களில் அவரும் ஒருவர். அந்த குரல், அந்தத் தீவிரம், ஒவ்வொரு நடிப்பிலும் அந்த நேர்மை. நீங்கள் மறைந்துவிட்டீர்கள் என்று நம்புவது மிகவும் கடினம்”என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “நான் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். ஒரு லாரி என் மீது மோதியது போல் உணர்கிறேன். ஒரு சிறந்த நடிகராக, யாருடனும் ஒப்பிடமுடியாது. அவர் தனது தனித்துவமான பாணி மற்றும் நடிப்பின் மூலம் மக்களின் இதயங்களில் தனக்கென இடத்தைப் பிடித்தார். ஹவுஸ்ஃபுல் 5ல் அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், கியரா அத்வானி, நடிகை கங்கனா ரனாவத், ராம் கோபால் வர்மா, சுனில் ஷெட்டி, ரவீனா தண்டன், ஊர்மிளா மாதோன்கர், பிரபுதேவா, ஸ்மிருதி இரானி போன்ற பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.