Israel Results: நெதன்யாகு கூட்டணி ‘அமோக’ முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான் | Israel Election Results: Benjamin Netanyahu bloc lead narrows as 32.5 percent of ballots counted

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 32.5 சதவீதம் எண்ணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ‘லிகுட்’ கட்சியின் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்தப்படும் காடி ஐசன்கோடின் ‘யாஷர்’ கட்சி கூட்டணி பின்தங்கி உள்ளது.

israel-election-results-benjamin-netanyahu-bloc-lead-narrows-as-32-5-percent-of-ballots-counted

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குச்சீட்டு முறையில் மக்கள் வாக்களித்தனர். இஸ்ரேல் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தம் 77.7 சதவீத ஓட்டுகள் பதிவானது. இது கடந்த 2022ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட 7.1 சதவீத ஓட்டு அதிகமாகும்.

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால் முழுமையான ரிசல்ட் வெளியாக நாளை மறுநாள் வரை ஆகலாம். அதேபோல் அதிகாரப்பூர்வமான ரிசல்ட் நவம்பர் 2 அல்லது நவம்பர் 4 ஆகிய தேதிகளில் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இஸ்ரேலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 5.27 மணியளவில் பதிவான வாக்குகளில் 31 சதவீதம் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி மட்டும் 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கடசியாக உருவாகி உள்ள இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு படை தலைமை தளபதி காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கூட்டணி பின்தங்கி உள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கட்சி 20 தொகுதிகளில் முன்னிலையில் வகிக்கிறது.

இது தற்போதைய டிரெண்ட்டிங் தான் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்படும்போது இந்த இடங்கள் மாற வாய்ப்புள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை எடுத்து கொண்டால் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் வரலாற்றில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது என்ற வரலாறு கிடையாது. இந்த நிலை தற்போதைய தேர்தலிலும் தொடர உள்ளது. தற்போதைய டிரெண்ட்டிலும் கூட பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு மெஜாரிட்டிக்கான 61 இடங்கள் கிடைக்கவில்லை. அவரது கூட்டணி 59 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *