k.p.vidhyatharan 2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசி அன்பர்களே செலவுகளில் கவனம்|2026: k.p.vidhyatharan – gurupeyarchi Simma Rasipalangal

Spread the love

சிம்ம ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல், 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரம், குரு பார்வை பணவரவு மூலம் மகிழ்ச்சியைத் தரும்.

1. குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு விஷயத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், நிதானமாகச் செயல்படுவது அவசியம். யாருக்காகவும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள்.

2. குடும்பத்தில் – சொந்த பந்தங்களிடையே வீண் விவாதங்கள் வரக்கூடும். நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், குடும்ப ரகசியங்களை அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சிலருக்குப் பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும்.

3. உங்களின் பூர்வபுண்ய – அஷ்டமாதிபதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகனுக்குத் திருமணம் ஏற்பாடாகும்.

4. சஷ்டம – சப்தமாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிமாநிலம், வெளிநாடு செல்வீர்கள். வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் முடியும். வீடு கட்டவும், வாங்கவும் லோன் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

5. தன – லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குரு பயணம் செய்வதால், புதிய பதவிகள் தேடி வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசி

6. குருபகவான் உங்கள் ராசிக்கு 4, 6 மற்றும் 8-ம் இடங்களைப் பார்ப்பதால், தாயாரின் உடல்நலம் சீராகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். கெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடு வீர்கள். சிலர், வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவார்கள்.

7. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். அதேநேரம் திடீர்ச் செலவுகளும் கையைக் கடிக்கும். சிலருக்கு, வழக்குகள் இழுபறியாகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

8. பணவரவு திருப்தி கரமாக இருந்தாலும், சேமித்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

9. மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் அலைச்சல், டென்ஷன் இருக்கும். சின்னச் சின்ன தடங்கல்கள் இருக்கும். எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

10. வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். டிராவல்ஸ், ஹோட்டல், பதிப்பகம், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.

11. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. எனினும் உரிய அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். கணினித் துறையினருக்கு, எதிர்பார்த்தபடி அயல்நாட் டில் வேலை கிடைக்கும். பார்வைக்கோளாறு, சளித்தொந்தரவு இருக்கும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *