Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

Spread the love

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது.

சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது.

படப்பூஜையில்
படப்பூஜையில்

கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை அடுத்து ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் ஜோடி. இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையே தனது நேரடி தெலுங்கு படத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

மீனாட்சி சௌத்ரி
மீனாட்சி சௌத்ரி

சூர்யாவின் ‘விஸ்வநாதன் &சன்ஸ்’ போல இதுவும் தெலுங்கு – தமிழில் உருவாகிறது. படத்தை டோலிவுட் கல்யாண் சங்கர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் இதற்கு முன் ‘மேட்’, ‘மேட் ஸ்கொயர்’, ‘டில்லு ஸ்கொயர்’ படங்களை இயக்கியவர்.

ஹைதாபாத்தில் இன்று நடந்த படப் பூஜையில் ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ, மீனாட்சி சௌத்ரி, சுனில் மற்றும் தயாரிப்பாளர் எனப் பலரும் பங்கேற்றனர். விரைவில் படத்தின் பர்ஃஸ்ட் லுக் வெளியாக விருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *