பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்.
இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்தப் போஸ்ட்டில் இந்தச் சம்பவம் சம்பந்தமாகப் பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போலீசார் தகவலின்படி, கடந்த 24-ம் தேதி, லவ்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி3 ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவருடைய பெயர் சரியாகத் தெரியவில்லை. அது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு குறிப்பிட்ட மாணவி தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்கு மேல் ஆகியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே மாணவர்களின் போராட்டத்திற்கான காரணம்.