‘LSG vs CSK : லக்னோவிடம் எப்படி தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்? |Chennai Super Kings Crumble Against Lucknow Super Giants: What Went Wrong for CSK in the LSG vs CSK Clash? | IPL 2026

Spread the love

188 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய லக்னோவின் தொடக்க ஆட்டகாரர்கள், கடந்த போட்டியில் எங்கு விட்டார்களோ அங்கிருந்தே தொடர்ந்தார்கள்.

கடந்த போட்டியில் ஜோஷ் இங்கிலிஷ், இந்தப் போட்டியில் மிச்சல் மார்ஷ்.

சென்னை அணியின் பந்து வீச்சுகளை அனைத்து ஸ்டாண்ட்களிலும் பறக்க விட்டு கொண்டிருந்தனர் லக்னோவின் ஓப்பனர்கள். 12வது ஓவரில்தான் கிடைத்தது அவர்களின் விக்கெட். முதல் விக்கெட் விழுவதற்குள் போட்டியே முடிந்து விட்டது, 188 என்ற இலக்கை 17வது ஓவரிலே எட்டி, சென்னையின் பிளே ஆப் கனவையும் சேர்த்து கிட்டத்தட்ட பறித்து விட்டது லக்னோ. புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்திற்கு நகர்ந்திருக்கிறது சென்னை அணி.

இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் கனவு என இருக்கையில் அந்த இரண்டு போட்டியும் பீக்கில் இருக்கும் ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிரே என நினைக்கும்போது பிளே ஆப் கனவை அடியோடு மறந்து அடுத்த சீசனிற்கு தயாராக சென்று விட்டனர் சென்னை ரசிகர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *