madurai vaigai river Governor’s Warning, Udhayanidhi Hits Back ‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி – என்ன நடந்தது மதுரையில்?

Spread the love

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஆளுநர் அர்லேகர். ஆளுநர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் அர்லேகருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா

ஆளுநர் அர்லேகருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா

இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஆளுநரை கண்டித்து பதிவிட்டிருக்கிறார். அதில் “ஆளுநர் ஆய்வு செய்தார்” என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.

மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில், அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் ,மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த தமிழக அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *