Mamitha: “ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இன்று…”- மமிதாவைப் புகழ்ந்த சூர்யா| actor surya about mamitha baiju in vishwanath and sons

Spread the love

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'விஸ்வநாத் & சன்ஸ்'

“விஸ்வநாத் & சன்ஸ்’

அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட். 12) ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பேசிய சூர்யா, “உங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. அதாவது பணம், குடும்ப பின்புலம் என எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. உங்களுக்குத் திறமையில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் உங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்.

அப்படி நம்பினால் எல்லாமே நடக்கும். மமிதா அதைத்தான் செய்திருக்கிறார். அவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறார்.

மேடியை உருவாக்கியதற்கு நன்றி, இந்தக் கதாபாத்திரத்தை எங்களது மனதில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறீர்கள் மமிதா” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *