MESSI : அசாத்திய ஹாட்ரிக்; அசத்திய மெஸ்ஸி! – உலகக் கோப்பையில் இமாலய சாதனை படைத்த சாதனை! | FIFA 2026: Lionel Messi equals World Cup scoring record with hat-trick

Spread the love

நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இன்று அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டி மைதானத்தில் நடந்த குரூப் “ஜே’ (Group J) போட்டியில் அர்ஜென்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின.

ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கண்கள் மைதானத்தின் மீது இருந்த வேளையில், அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலகப் புகழ்பெற்ற ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்த அசுரத்தனமான ஆட்டத்தின் மூலம் அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை வீழ்த்தி (3-0) அபார வெற்றி பெற்றுள்ளது.

மெஸ்ஸி

மெஸ்ஸி
Reed Hoffmann

போட்டி தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே அர்ஜென்டினா அணி ஆட்டத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. போட்டியின் முதல் பாதியிலேயே எதிரணியின் தடுப்பு அரணை மிக அழகாக உடைத்த மெஸ்ஸி, தனது முதல் கோலை அடித்து அர்ஜென்டினா அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். அல்ஜீரிய வீரர்களால் மெஸ்ஸியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவே முடியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *