Nanayam Vikatan – 11 October 2026 – ‘ஆட்குறைப்பு…’ – யூ-டர்ன் அடிக்கும் நிறுவனங்கள்… இதுதான் காரணமா?

Spread the love

அதேநேரம், பங்குச்சந்தையில் எப்போதும் செய்திகள், தரவுகள், கருத்துகள் உள்வாங்கப்பட்டு, முன்கூட்டியே விலைகளில் பிரதிபலித்துவிடுகிறது. ஆட்குறைப்பு நேரும்போது, வரவிருக்கும் தடைகளுக்கேற்ப அவை முன்னதாகவே விலைகளைச் சரிசெய்திருக்கும். எனவே, ஆட்குறைப்புகளினால் உங்கள் பங்குச் சந்தை குறித்த பார்வை மாறக்கூடாது.

இந்தியாவில் வேலை இழப்புகள் 2026-ல் அதிகரித்தன. AI சார்ந்த உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, ஏப்ரலில் ஆரக்கிள் 12,000 இந்தியப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ், உலகளவில் 3,200 பணியிடங்களைக் குறைப்பதாக அறிவித்ததும் பல இந்தியர்களைப் பாதித்துள்ளது. AI-ஐ காரணம் காட்டி, விசா நிறுவனம் 1,400 பணியிடங்களைக் குறைத்தது.

இதனால், பலர் வேலையும் வருமானமும் இன்றித் தவிக்க, அவர்கள் இடத்தை எந்திரங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதாக சிலர் கருதுகின்றனர். இந்த அச்சம் தேவையற்றது. பல சமயங்களில், நிறுவனங்கள் ஆட்குறைப்புக்கான பழியை AI மீது போடுவதன் காரணம், அதிகப்படியான ஆட்களை வேலைக்கு அமர்த்தியதையும், நிறுவனத்தின் குறைவான செயல் திறனையும் மறைப்பதற்காகத்தான். ஆட்குறைப்பில் தங்கள் தவறை ஒப்புக்கொள்வதைவிட நிறுவனங்கள் AI மீது பழிபோடவே முனைகின்றன.

உண்மையில், AI அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவே செய்துள்ளன. ஃபோர்டு நிறுவனம், AI செயல்திறனை நம்பி பணியாளர்களைக் குறைத்தது. ஆனால், அது மிகையான மதிப்பீடென நிரூபணமான தும், மீண்டும் பலரை வேலையில் அமர்த்தியது. மனிதர்களின் முடிவெடுக்கும் திறனின் மதிப்பை நிறுவனங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் AI, மெஷின் லேர்னிங் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தும் திட்டம், உலகளவில் AI தூண்டி விட்டிருக்கும் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தேவையைக் காட்டுகிறது.

குறிப்பிட்ட துறைகளில் பணியாளர்கள் இடத்தை AI ஆக்கிரமிப்பது உண்மைதான். ஆனால், AI மொத்தமாக மனிதர்களின் வேலைவாய்ப்பையே பாதியாகக் குறைத்துவிடும் என அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தவகையில், இந்திய வேலை வாய்ப்புச் சந்தை மிக ஆரோக்கியமாகவே உள்ளது. வேலைவாய்ப்பு பற்றிய கவலைகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம், கடந்த ஆறு மாதங்களிலேயே மிகக் குறைந்த அளவான 5%-ஐ எட்டியது. இது கடுமையான
வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தைத் தகர்த்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *