NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!’ – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்! | Supreme court on neet scam issue

Spread the love

2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் அதிரடியான மற்றும் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.

“கடந்த முறை நாங்கள் பல உத்தரவுகளைப் பிறப்பித்து, உயர்மட்டக் குழுக்களை அமைத்த பிறகும், மத்திய அரசு மற்றும் தேசியத் தேர்வு முகமை இன்னும் எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று நீதிபதிகள் தங்களது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யு ஜி வினாத்தாள்கள் கசிந்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்பொழுது மறுதேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல மனுக்களில் நாட்டின் மிக முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மனுதாரர்களின் முக்கியக் கோரிக்கைகள்

1. தேசியத் தேர்வு முகமையை நீக்கிவிட்டு மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும்.

2. நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் புதிய ஒரு நம்பகமான குழு வேண்டும்.

3. வினாத்தாள் கசிவைத் தடுக்க நீட் தேர்வை முழுமையாகக் கணினி வழித் தேர்வாக  மாற்ற வேண்டும் 

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *