தங்கம், வெள்ளி:
ஈரான் போர் தொடங்கியதும், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை இறங்குமுகத்திற்கு வந்தது.
ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலருக்கு மேலும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 80, 90 டாலர்கள் என வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், போருக்குப் பின், தங்கம் 4,800 டாலருக்குக் கீழும், வெள்ளி ரூ.80 டாலருக்குக் கீழும் வர்த்தகமாகத் தொடங்கின.
ஆனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தை அதிகம் அடிப்பட தொடங்கியதில் இருந்து வெள்ளி ஒரு அவுன்ஸிற்கு 75 – 87 என வர்த்தகமாக தொடங்கியிருக்கிறது.
தங்கத்தில் பெரியளவு ஏற்றம் காணப்படவில்லை. அதன் விலை நிலையாகவே இருந்து வருகிறது.
எண்ணெய் தட்டுப்பாட்டை சரி செய்வது, பணவீக்கத்தை சரி செய்வது போன்றவை தான் அடுத்து உலக நாடுகளின் ஃபோக்கஸாக இருக்கும். அதனால், தங்கம் விலை உயரும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது.
ஆனால், வெள்ளிக்கு தொழிற்சாலை பயன்பாடு இருப்பதினால், அதன் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிக வாய்ப்புகள் உள்ளது.