NEET போராட்டம்: அமித் ஷா விளக்கம் தர ரெடி… எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா|Amit Shah to Speak on Student Crackdown: Will Opposition Agree?

Spread the love

இதற்கு எதிர்க்கட்சிகள், “அமித் ஷாவிற்கு தெரிந்து இந்த வன்முறை நடந்திருந்தால் அது தவறு. அவருக்கு தெரியவில்லை என்றால், அது நிர்வாகக்கேடு. இப்படி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒருவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை.

எது எப்படி இருந்தாலும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பதிலடி தருகின்றன.

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்கிற கேள்வியைக் கேட்டு தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.

கிரண் ரிஜிஜு

கிரண் ரிஜிஜு

வருகிற 13-ம் தேதியோடு முடிவடையும் கூட்டத்தொடரில் இதுவரை 16 அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், ஜூன் 20-ம் தேதியை தவிர்த்து, ஒரு நாள் கூட அமித் ஷா அவைக்கு வரவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வே அமித் ஷாவின் ஆப்சென்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று, “மாணவர்கள் போராட்டம் குறித்து முழுமையாக விவாதிக்க அரசு தயார். ஆனால், உள்துறை அமைச்சரின் விளக்கத்தின் போது, எதிர்க்கட்சிகள் அமளியோ, அவை நடவடிக்கையை தடுப்பதுபோலவோ எதுவும் செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *