சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சாய் அபிநோவ் (18). பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த இவர், மருத்துவ படிப்பில் சேருவதற்காக, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை இருமுறை எழுதியுள்ளார். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால் மூன்றாவது முறையாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் மீண்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு அருந்தி விட்டு அறைக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை திறந்து பார்த்தபோது, சாய் அபிநோவ் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், “பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.