தங்கம் வாங்குவோருக்கு ஷாக்…அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! – Kumudam

Spread the love

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ 2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,13,920க்கும், கிராமுக்கு ரூ 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,240க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,14,880க்கும், கிராமுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு கிராம் 14,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

5 ஆம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  நேற்று (8.09.2026) சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும், ஒரு கிராம் ரூ 14,270 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *