‘No Emotional Decisions’: What Did MK Stalin Say on DMK’s Stand on Delimitation? |’உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!’ – Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

Spread the love

கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், நம் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக, எந்த உறுதியும் கொடுக்காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்தார்கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாக கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.

பாஜகவுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது , அதில் தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது என ‘practical’-ஆன தீர்வை 2024-ஆம் ஆண்டே நாம் சட்டமன்ற தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.

நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

தற்பொழுது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை எனில், 1971-ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுத்த சென்சஸ் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்துவிடுவார்கள். அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாகிவிடும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது.

நம்மை பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோக கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1967 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ஆகக் குறைத்தார்கள். ஆனால், தற்போது நம்முடைய பர்செண்டேஜில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.

நம்முடைய கடமையை நாம செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் கூடாது.

எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *