அதோடு கொலை செய்துவிட்டு பிடிபட்டுக்கொண்டால் தனது மனைவியின் பெயரை சொல்லி அவரை சிக்க வைத்துவிடும்படி கூறி இருந்தார். ஷெலுவிடம் விசாரித்தபோது தனது கணவரைப் பாதுகாப்பதற்காக தான் சிக்கிக்கொண்டதாக போலீஸிடம் கூறினார்.
`கொலை செய்ததற்காக வருந்தவில்லை’
சுப்ரத்திடம் போலீஸார் விசாரித்தபோது தனது தந்தையை கொலை செய்ததற்காக தான் வருத்தப்படவில்லை என்றும், அதேசமயம் கத்தியால் குத்திக்கொலை செய்ததுதான் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தனது மனைவியை தேவையில்லாமல் சிக்க வைத்துவிட்டதாகவும் சுப்ரத் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கான்பூர் போலீஸ் கமிஷனர் ரகுபீர் லால் இது குறித்து கூறுகையில், அழைப்பு விவர பதிவுகள், சிசிடிவி காட்சிகள், சாட்டிங் பதிவுகள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையில், சுப்ரத் தனது தந்தையை கொலை செய்ய விஷால் மற்றும் ராஜ் கிஷோர் ஆகியோருடன் சதி செய்ததது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஷெலுவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவரை விடுவிக்க நீதிமன்றத்திற்கு செல்லும் முன் அவருக்கு இதில் இருக்கும் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி நெருக்கடியால் சுப்ரத், சொந்த கடையில் இருந்து மருந்துகளை எடுத்து விஷால் மூலம் விற்று பணம் திரட்டத் தொடங்கினார். வினீத் அவரைப் பலமுறை பிடித்து, அடிக்கடி ஊழியர்கள் முன்னிலையில் திட்டினார்,” என்றும் அவர் கூறினார்.