
ஒரு முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்த முறையில் கணக்கிடுவதற்குப் பெயர் ‘அப்சலுயுட் முறை’ (Absolute) என்று பெயர். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் போடுகிறேன். சில பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் லாபத்தை மொத்தமாக அளவிடுவதுதான் இந்த ‘அப்சலுயுட் முறை’.
உதாரணமாக, 2001-ஆம் ஆண்டில் ஒரு முதலீட்டில் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள். 2025-ல் அது 10 லட்சம் ரூபாயாக உயர்கிறது எனில், நீங்கள் 100% லாபம் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.5 லட்சம், 2023 ரூ.8 லட்சமாக உயர்கிறது எனில், உங்கள் முதலீடு 60% லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம்.
நம் முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தை இப்படிப் பலரும் கணக்கிடும்போது, மிகப் பெரிய லாபம் அடைந்துவிட்டதாக நினைக்கிறோம். மீண்டும் மீண்டும் அதே முதலீட்டில் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்து அதே அளவு லாபம் காண முயற்சி செய்கிறோம்.
ஆனால், இப்படிக் கணக்கு போடுவதே சரியல்ல என்கிறபோது, இந்தக் கணக்கை வைத்து அதே முதலீட்டில் திரும்பத் திரும்ப பணம் போடுவதால், நமக்குப் பெரிய லாபம் கிடைக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!
அப்படி எனில், முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று பார்ப்போமா?