NRI Corner 9 – உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

Spread the love

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும்; அல்லது, வீட்டுச் செலவுக்காக மனைவிக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதுதான். பலரும் மாதச் சம்பளம் வாங்கியவுடன் அதில் சிலபல ஆயிரங்களை சொந்தபந்தங்களுக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இது வகையான குடும்பக் கடமை எனில், இன்னொரு அருமையான வழியைப் பின்பற்றினால், நம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்த மாதிரியும் இருக்கும்; அதே சமயம், நம் பணம் குறையாமலும் இருக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதில்லையா? அது என்ன ஃபண்ட் திட்டம் என்று கேட்கிறீர்களா?

SIP – SWP Growth

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பந்தன் எஸ்.டபிள்யூ.பி (Bandhan SWP) என்கிற ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த பந்தன் எஸ்.டபிள்யூ.பி திட்டம் மூலம் நீங்கள் மாதந்தோறும் யாருக்குப் பணம் தர நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு தேதி தவறாமல் தரமுடியும்.

பந்தன் எஸ்.டபிள்யூ.பி என்பது அடிப்படையில் ஒரு எஸ்.டபிள்யூ.பி திட்டம்தான். அதாவது, நீங்கள் ரூ.20 லட்சத்தை ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள். உடனேயோ அல்லது ஒரு ஆண்டு கழித்தோ அந்த ஃபண்டில் இருந்து ரூ.15 ஆயிரம் என்கிற கணக்கில் மாதந்தோறும் பணத்தைத் திரும்ப எடுக்கிறீர்கள். இந்த முறையைப் பயன்படுத்தும்போது, பல ஆண்டு காலம் நீங்கள் பணத்தை எடுத்துக்கொண்டே இருக்க முடியும் என்பதால், இப்போது பல முதலீட்டாளர்கள் எஸ்.டபிள்யூ.பி முறையைத் தேடி பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

பொதுவாக, எஸ்.டபிள்யூ.பி முறையின் முக்கியமான நோக்கம், நமக்குத் தேவையான பணத்தை நாமே எடுத்துக்கொள்வதாகும். ஆனால், நம் பெற்றோருக்கான மாதச் செலவுக்கு, மகள்/மகனின் கல்லூரிப் படிப்புச் செலவுக்கு அல்லது, வீட்டுத் தேவையான செலவை மனைவிக்குப் பணம் அனுப்ப வேண்டும் எனில், அதை எஸ்.டபிள்யூ.பி முறையில் எப்படி எடுப்பது என்கிற கேள்விக்கான பதில்தான் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் பந்தன் எஸ்.டபிள்யூ.பி. நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தத் திட்டம் மூலம் உங்கள் சொந்தபந்தங்களுக்குப் பணம் அனுப்ப முடியும்.

SWP

உதாரணமாக, நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறீர்கள். உங்கள் பெற்றோர் சீனியர் சிட்டின்களாக சென்னையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் நீங்கள் ரூ.25 ஆயிரம் தரவேண்டும். இந்தப் பணத்தை எப்படித் தரலாம்?

நன்கு செயல்படும் ஒரு ஃபண்டில் ரூ.25 லட்சத்தை 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அன்று நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். பந்தன் எஸ்.டபிள்யூ.பி மூலம் மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை உங்கள் பெற்றோரின் வங்கிக் கணக்கில் சென்று சேருகிற மாதிரி செய்கிறீர்கள். மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் என அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பணத்தைத் தருகிறீர்கள்.

இந்த 3 ஆண்டு காலத்தில் நீங்கள் மொத்தம் ரூ.9 லட்சத்தை உங்கள் பெற்றோருக்குத் தந்திருப்பீர்கள். என்றாலும், மூன்று ஆண்டு முடிவில் நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.22,57,313 உங்கள் முதலீட்டுக் கணக்கிலேயே இருக்கும். ஆக, உங்கள் பெற்றோருக்கு நீங்கள் தந்த பணம் வெறும் ரூ.2,42,687 மட்டுமே. மீதப் பணம் உங்கள் முதலீட்டில் இருந்துவந்த லாபத்தைத்தான் தந்திருக்கிறீர்கள். ஆக, உங்கள் பெற்றோருக்கான பணத்தையும் தந்தபடி ஆச்சு. உங்கள் பணம் உங்களிடமே இருந்தபடியும் ஆச்சு!

SWP

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் மகன்/மகள் பெங்களூரில் படிக்கிறார். அவருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் அனுப்ப வேண்டும். இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

நன்கு செயல்படும் ஒரு ஃபண்டில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள். அதில் இருந்து மாதந்தோறும் ரூ.15 ஆயிரத்தை பந்தன் எஸ்.டபிள்யூ.பி மூலம் உங்கள் மகன்/மகள் வங்கிக் கணக்கில் சென்று சேரும்படி செய்கிறீர்கள். 3 ஆண்டுகளில் உங்கள் மகன்/மகளுக்கு அனுப்பிய பணம் ரூ.5,40,000-ஆக இருக்கும்! ஆனால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் நிமிடத்தில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டுக் கணக்கில் இருக்கும் பணம் ரூ.19,92,111-ஆக இருக்கும்!

ஆக, உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருந்து, அதை ஒரு நல்ல ஃபண்டில் முதலீடு செய்து, பந்தன் எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுத்தால், நீங்கள் மிகப் பெரிய அளவில் நன்மை பெறலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

வெளிநாட்டுத்   தமிழர்களுக்கான   சிறப்பு  நிகழ்ச்சி!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு முதலீட்டு வழிகாட்டு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொண்டு பயன் அடைய நினைக்கிறீர்களா? பின்வரும் லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr18_2026

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *