Ooty: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்; VAO கைது; சிக்கியது எப்படி?

Spread the love

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரின் தந்தை பெயரில் உள்ள 3 ½ சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கியிருக்கிறார். பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த வசந்த், பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1. 25 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார் வி.ஏ.ஓ உமா பிரியா. கோபமடைந்த வசந்த், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால், நீலகிரி லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டு புகாரளித்திருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான காவல்துறையினர் உமா பிரியாவைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டுமிட்டுள்ளனர்.

விஏஓ உமா பிரியா
விஏஓ உமா பிரியா

ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். நியூ அட்டுபாயில் என்ற இடத்தில் வி.ஏ.ஓ உமா பிரியா பணி நிமித்தமாக இருந்ததால், அந்தப் பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்குமாறு வசந்திடம் கூறியுள்ளார். ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அந்தத் தனியார் வங்கி ஊழியரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வி.ஏ.ஓ உமா பிரியாவை நேற்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *