“சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்” – மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் | bollywood actor Akshay Kumar says his Son Working for Salary of ₹4,500

Spread the love

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார்.

லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட்டைத் தானே சமையல் செய்து சாப்பிட்டதாக அக்‌ஷய் குமார் இதற்கு முன்பு பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தார். எப்போது பொதுநிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஆரவ், சினிமா நிகழ்ச்சி அல்லது தனது தந்தையொடு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

பேஷன் டிசைனிங் முடித்துள்ள ஆரவ் தற்போது கிராமங்களில் உள்ள ஆடைகள், பிரிண்டிங் குறித்து தெரிந்து கொள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் அளித்த பேட்டியில், “‘எனது மகன் ஆரவ்விற்கு சினிமாவின் ஆர்வம் கிடையாது. சினிமாவிற்கு வரும் திட்டமும் இல்லை. சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடியவர். பேஷனில் ஆர்வம் காட்டுகிறார்.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

ஆரவ் வேலை செய்து கொண்டே கற்றுக்கொண்டிருக்கிறார். இப்போது ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார். தனது பேஷன் கலையை முழுமையாகத் தெரிந்து கொள்ள அதிக அளவில் பயணம் செய்கிறார்.

அதோடு கிராமங்களில் இருக்கும் பேஷன் மற்றும் பிரிண்டிங்களைத் தெரிந்து கொள்ள கிராமங்களுக்குச் செல்கிறார். எனக்கும் எனது மகனுக்கு எப்போதும் கருத்து வேறுபாடு வந்ததில்லை.

எனக்கு ஆலோசனைகள் வழங்குவதில் நம்பிக்கை இல்லை. அதனால் நான் யாருக்கும் அறிவுரைகள் கொடுப்பதில்லை. குறிப்பாக எனது மகனுக்குக் கொடுப்பதில்லை. யாரையும் மனம் வருந்தும் படி செய்யக்கூடாது என்று மட்டும் சொல்வேன். மற்றதை அவனே பார்த்துக்கொள்வான்” என்று தெரிவித்தார்.

அக்‌ஷய் குமாருக்கு இதற்கு முன்பு கனடா குடியுரிமை இருந்தது. அது குறித்து அடிக்கடி விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது கனடா குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *