Ramayana: ரன்பீர், யாஷ் எல்லாம் ஓரமா போங்க.. தாய்லாந்து ரசிகர்களின் ‘க்ரஷ்’ ஆன குணால் கபூர்! | Kunal Kapoor as Lord Indra in Ramayana Wins Hearts in Thailand

Spread the love

India

oi-Vignesh Selvaraj

டெல்லி: ‘ராமாயணா’ திரைப்படத்தில் இந்திரனாக நடித்த குணால் கபூர், தாய்லாந்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். ‘ராமாயணா’ படத்தின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோரை ஓவர்டேக் செய்து, குணால் கபூர் தாய்லாந்து ரசிகர்களிடையே பெரும் அபிமானம் பெற்றுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 5 அன்று ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வெளியானது. வெளியான 8 நாட்களில் இந்தப் படம் உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் ரன்பீர் கபூர் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக ‘ராமாயணா’ உருவெடுத்துள்ளது.

Kunal Kapoor as Lord Indra in Ramayana Wins Hearts in Thailand

ராமாயணா திரைப்படம்

இரண்டு பாகங்களாக சுமார் ரூ.4,000 கோடி பிரமாண்ட பொருட்செலவில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவானது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தில், ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரவி துபே, அருண் கோவில், குணால் கபூர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2028 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.

‘ராமாயணா’ திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.680.30 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் 1000 கோடியைக் கடந்து வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

தாய்லாந்து ரசிகர்களின் ‘க்ரஷ்’ ஆன குணால் கபூர்

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகர் குணால் கபூர், தாய்லாந்து ரசிகர்களின் திடீர் ‘க்ரஷ்’ ஆக உருவெடுத்துள்ளார். இந்திர தேவ் ஆக நடித்திருக்கும் குணால் கபூருக்கு தாய்லாந்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. தாய்லாந்து ரசிகர்கள், அவரது தோற்றத்திற்காக சமூக ஊடகங்களில் தங்கள் பாராட்டுகளைப் பொழிந்து வருகின்றனர்.

இந்திர தேவாக குணால் கபூர் நடித்துள்ள காட்சிகளின் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்வது முதல் அவரது தோற்றத்தைப் பற்றி புகழ்ந்து எழுதுவது வரை, தாய்லாந்து ரசிகர்கள் குணால் கபூர் மீது மிகப்பெரிய அளவில் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.

இந்திரனாக குணால் கபூர்

அவரது கம்பீரமான தோற்றம், நேர்த்தியான ஆடை மற்றும் தேவர்களின் அரசனாக அவர் சித்தரிக்கப்பட்ட விதம் ஆகியவை ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளன. பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குணால் கபூரை குறிப்பிட்டு, தாய்லாந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

குணால் கபூர், தன் மீதான தாய்லாந்து ரசிகர்களின் இந்த அன்பை ஏற்றுக்கொண்டு, சில பதிவுகளுக்கு பதிலளித்துள்ளார். ஒரு ரசிகருக்குப் பதிலளித்த அவர், தனது சகோதரியின் குடும்பம் தாய்லாந்தில் வசிப்பதாகவும், தாய்லாந்து நாட்டைத் தனது ‘இரண்டாவது வீடு’ என்றும் வர்ணித்துள்ளார்.

குணால் கபூர்

குணால் கபூர் , ‘மீனாக்ஸி: எ டேல் ஆஃப் த்ரீ சிட்டீஸ் ‘ (2004) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘ரங் தே பசந்தி’ (2006), ‘லவ் ஷுவ் தே சிக்கன் குரானா’ (2012) மற்றும் ‘ஆஜா நச்லே’ (2007) போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றார்.

மேலும் அவர் ‘டியர் ஜிந்தகி’ , ‘கோல்ட்’ மற்றும் ‘தி எம்பயர்’ சீரிஸிலும் நடித்துள்ளார் . நடிப்பைத் தவிர, குணால் ஒரு தொழிலதிபரும் கூட. கிரவுட்ஃபண்டிங் தளமான ‘கெட்டோ’வின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *