Rashmika Mandanna: "அவர்கள் திட்டதோடு இருந்தது எனக்கு பயத்தைத் தந்தது!' – ராஷ்மிகா மந்தனா

Spread the love

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். முக்கியமாக, பாலிவுட்டிலும் முக்கிய நாயகியாக உருவெடுத்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

பாலிவுட்டில் இத்தகைய வெற்றி கிடைத்ததற்காக காரணம் பற்றி சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார் ராஷ்மிகா.

அவர் பேசுகையில், “தென்னிந்திய சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பாலிவுட் திரையுலகிற்குச் சென்றபோது, வழக்கமான எந்தவொரு அமைப்பிற்குள்ளும் சிக்காமல் இயங்கிய தருணமே என்னைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானது.

அப்போது மற்றவர்கள் ஒரு தெளிவான திட்டத்துடன் இருப்பது போல் தோன்றியதால் எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், என் உள்ளுணர்வை நம்பிப் பயணித்தேன்.

ராஷ்மிகா மந்தனா

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் விஷயங்களே நமக்கு மிகப்பெரிய பலமாக மாறுகின்றன என்பதை உணர்கிறேன்.

மேலும், ஃபேஷனைப் பொறுத்தவரை எனக்குக் கம்போர்ட்தான் முதன்மையானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழாமல், தனக்கே உரித்தான பாணியில் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதே உண்மையான அழகு,” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *