Regal Jewellers: புதிய சமூகநல முயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்!|Regal jewellers opening show room in t.nagar

Spread the love

தமிழ்நாட்டில் ரீகல் ஜுவல்லர்ஸ் வருகையின் முக்கிய அம்சமாக, “ரீகல் சுமங்கலி நேர்மை விழா’ என்ற சமூக நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ,பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள 25 தம்பதிகளின் திருமணத்தை ரீகல் ஜுவல்லர்ஸ் முழுமையாக ஏற்று நடத்துகிறது.

இந்த சமூக பொறுப்புணர்வு மிக்க திட்டம் ரீகல் ஜுவல்லர்ஸின் நிறுவனர் மற்றும் சேர்மன் திரு. சிவதாசன் TK. அவர்களின் சிந்தனையில் உருவானது. “ஒவ்வொரு புதிய தொடக்கமும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் புதிய தொடக்கங்களை உருவாக்க வேண்டும்” என்ற அவரது நம்பிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த தருணத்தில், புதிய ஷோரூம் திறப்பதோடு மட்டுமல்லாமல், 25 தம்பதியினர் தங்களது வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உதவுவதன் மூலம், இந்த தருணத்தை அர்த்தமுள்ள நிகழ்வாக மாற்றியுள்ளது ரீகல் ஜுவல்லர்ஸ். 

தங்களது மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உயர்வான எண்ணத்தின் வெளிப்பாடாக இந்த திட்டம் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரீகல் ஜுவல்லர்ஸ் தங்களின் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு. VMS.முஸ்தபா அவர்கள், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது பயணத்தை தொடங்கியதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும் அதன் சமூக அக்கறை மிக்க திட்டத்தை பாராட்டி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும்  தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரீகல் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. விபின் சிவதாஸ் கூறியதாவது:

“ரீகல் ஜுவல்லர்ஸுக்கு சென்னை அளித்துள்ள அன்பான வரவேற்பிற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மறக்கமுடியாத தொடக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த எங்கள் மதிப்பிற்குரிய விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

சென்னையில் தனது முதல் ஷோரூமைத் திறந்துள்ள ரீகல் ஜுவல்லர்ஸ், தமிழ்நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக நகை உற்பத்தியில் பெற்றுள்ள சிறப்புமிக்க அனுபவத்தையும், மேனுஃபேக்ச்சரரிடமிருந்து  நேரடியாக நகை வாங்கலாம் என்ற தனது வணிக முறையையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. அடுத்ததாக புதுச்சேரியில் தனது ஷோரூமைத் திறக்கவுள்ள இந்த நிறுவனம், வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பல ஷோரூம்களைத் தொடங்கி தனது கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *