அவர் பேசுகையில், “டிரெய்லர் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சொல்பவர்களிடம் நான் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.
அப்படியென்றால், நீங்கள் அதை எத்தனை முறை பார்த்தீர்கள்? நாங்கள் எதைக் காட்டியிருக்கிறோம், எதைக் காட்டவில்லை என்று இவ்வளவு நுணுக்கமாகக் கணிப்பதற்கு, நீங்கள் குறைந்தது 15 முதல் 20 முறையாவது அந்த டிரெய்லரைப் பார்த்திருக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு எனது நன்றிகள்” என்றவர், “வெறும் டிரெய்லரை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.
முதலில் முழுப் படத்தையும் பாருங்கள். நம் நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கதையைச் சொல்வதற்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.
ஆனால், படத்தைப் பற்றிய பேச்சு முழுவதும் அதன் தொழில்நுட்பத்தைப் பற்றியதாகத் திசைமாறிவிட்டது. நாங்கள் ஏ.ஐ பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?
உங்கள் தகவலுக்காக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் படக்குழு உண்மையான இடங்களுக்குச் சென்று, மிகவும் கடுமையான சூழலில் அயராது உழைத்து இப்படத்தைப் படமாக்கியுள்ளது.
படம் வெளியாகும்போது, நம் ராணுவ வீரர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும், அவர்களின் வலியையும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் உணர்வுகளையும் ரசிகர்கள் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தயவுசெய்து திரையரங்கில் உட்கார்ந்துகொண்டு ஏ.ஐ மற்றும் கிராபிக்ஸ் குறைகளை ஆராயாதீர்கள். இந்தப் படம் அதைப் பற்றியது அல்ல” எனப் பதிலளித்திருக்கிறார்.