Scene: ” ‘ழகரம்’ தொடங்கியதற்கான காரணம்!?” – புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து சூர்யா |suriya speech scene movie event dubai naslen nazriya

Spread the love

சூர்யாவின் “சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் நிகழ்வு துபாயிலுள்ள ஒரு மாலில் நடைபெற்றது.

Suriya - Scene Title Teaser

Suriya – Scene Title Teaser

சூர்யா பேசுகையில், “‘சீன்’ கதை கேட்டு முடித்தவுடனேயே ‘இந்தப் படத்தை நாம் பண்ணுகிறோம்’ என்று முடிவு செய்து கைகொடுத்துவிட்டோம்.” என்றவர், தொடர்ந்து, “நான் சரவணனாக இருக்க முடியாது.

ரசிகர்கள் என்னைச் சூர்யாவாக தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் அவர்களுக்காக நான் ‘சூர்யா’வாக மாற வேண்டியிருந்தது. எனக்குள் இருக்கும் இன்னொரு பக்கத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

ரசிகர்கள் காட்டுவது எவ்வித எதிர்பார்ப்புமற்ற உண்மையான அன்பு. அதனால் என்னால் எவ்வளவு உண்மையாகவும், இதயப்பூர்வமாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *