இது வெறும் இடைத்தேர்தல் தானே. அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. நாளை விசாரணை நடைபெறுமா என்பது இன்னும் முடிவாகவில்லை” என்றார்.
சர்வாதிகார ஆட்சி
சர்வாதிகார ஆட்சி நடப்பதாக கூறிய உத்தவ் தாக்கரே ஹிட்லரையும் குறிப்பிட்டார். “ஹிட்லரும் இது போன்ற ஒரு சர்வாதிகாரியாகவே இருந்தார். ஆனால் இறுதியில், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நாட்டிலும் அத்தகைய சூழல் உருவாகக்கூடும். தன்னிச்சையாகச் செயல்படுபவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். பேரணிக்கு வந்த எங்களது கட்சியினரை கட்சி கொடியை கூட எடுத்து வர அனுமதிக்கவில்லை. தேசிய கொடியை மட்டுமே எடுத்து வரவேண்டும் என்று சொன்னார்கள்” என்று அவர் கூறினார்.
இதில் பேசிய சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் ,“இந்தப் போராட்டம் நாட்டில் நிலவும் ஹிட்லர் ஆட்சிக்கு எதிரானது. தேர்தல்களைக் கடத்துவது, தேர்தல் ஆணையத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சர்வாதிகார ஆட்சி நடத்துவது, வாக்குகளைத் திருடுவது, தேர்தலை திருடுவது, எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களை வேட்டையாடுவது போன்ற அனைத்திற்கும் எதிரானது இந்த போராட்டம்” என்று குறிப்பிட்டார்.
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய `காக்ரோச் ஜனதா கட்சி’ இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையின் சிவாஜி பூங்காவில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியது.