Software engineer murders live-in partner following a midnight argument over suspicions about her conduct-நடத்தையில் சந்தேகத்தால் நள்ளிரவு வாக்குவாதத்தில் லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

Spread the love

புனேயில் ஏராளமான சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்காக அதிக அளவில் வாடகை வீடுகள், லாட்ஜ்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஹிங்ஜேவாடி என்ற இடத்தில் இருக்கும் பி.ஜி.ஹோம் ஒன்றில் தங்கிக்கொண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சுபம் என்பவர் வேலை செய்து வந்தார். அவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான கோமல்(27) என்ற பெண்ணும் தங்கி இருந்தார். அவர்கள் இருவரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்களது உறவு இருவரது வீட்டிற்கும் தெரியும். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அப்பெண் விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தார்.

சுபத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கோமல் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போதும் இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுபம் அப்பெண்ணைத் தாக்கினார்.

அதோடு அதிகாலை 3:30 மணியளவில் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுபம் மீண்டும் அந்தப் பெண்ணின் முகத்தில் குத்தியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதச் செய்தார்.

அதோடு அடித்து கொலை செய்துவிட்டு காலை 6 மணி வரை அப்பெண்ணின் உடலோடு சுபம் இருந்தார். காலையில் அவரே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து தனது பார்ட்னர் மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்தார். உடனே கோமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை சோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்திருந்தார். சுபத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கோமலை அடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இரண்டு பேரும் பி.ஜி.ஹோமிற்கு வந்ததாக கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *