Split in Thackeray’s party 2.0: Six Uddhav-faction MPs petition Speaker for recognition as a separate group.-தாக்கரே கட்சியில் பிளவு 2.0: தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் 6 பேர் மனு

Spread the love

எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு

அதோடு இன்று டெல்லியில் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு உத்தவ் தாக்கரே தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கட்டாயம் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்கவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 4 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பில் எதிர்பார்க்கிறது. அப்படி கலந்து கொள்ளும்பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டேயை ஆதரிக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

பணம் கிடைக்காமல் விமானத்தில் ஏற மறுப்பு

அதிருப்தி எம்.பி.க்களில் இடம் பெற்றுள்ள சஞ்சய் தேஷ்முக் இதுவரை 4 கட்சிகளில் இடம் பெற்று இருக்கிறார். முதலில் ஒன்று பட்ட சிவசேனாவில் இருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவிற்கு தாவினார். கடைசியாக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.பியானார். அங்கேயும் நிலைத்து நிற்காமல் 5வதாக சிவசேனா(ஷிண்டே) விற்கு தாவி இருக்கிறார். டெல்லியில் சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில்,”ஆபரேஷன் டைகர்’ (Operation Tiger) எளிதானதாக இருக்காது. மகாராஷ்டிராவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். வாக்குறுதி அளித்தபடி 50 கோடி ரூபாயில் 15 கோடி ரூபாயை முன்பணமாகப் பெறாதவரை, டெல்லிக்குச் செல்லும் சிறப்பு விமானங்களில் ஏறக்கூட அவர்கள் மறுத்துவிட்டனர்.

தாராஷிவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் கட்சி மாறினால், அவரது தந்தையின் 20 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்படும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் செவ்வாய்க்கிழமை வரவிருந்த அந்தத் தீர்ப்பு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.” என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *