தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். அவர் முன்வைத்த டாப் 5 குற்றச்சாட்டுகள் என்னென்ன?
ஆள் பற்றாக்குறை:
இன்றைய தேதிக்கு மின்சார வாரியத்திற்கு 1,40,635 ஊழியர்கள் தேவை. ஆனால், 74,714 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
இதிலும் இன்னும் 16000 பேர் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வை எட்டிவிடுவர். ஏற்கனவே பணிச்சுமையில் இருக்கும் ஊழியர்கள் மீது இன்னும் பணிச்சுமை ஏறும்.