இந்திய சந்தையிலும் சரி… சர்வதேச சந்தையிலும் சரி, தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது தங்கம். வெள்ளியோ ஒரு அவுன்ஸிற்கு 60 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,140. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,05,120. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.230.
ஈரான் போருக்குப் பின்னே, தங்கம், வெள்ளி விலை சரிந்துதான் வருகிறது. ஆனால், இப்போது வர்த்தகம் ஆகும் தங்கம், வெள்ளி விலை என்பது டிரேடர்களுக்கு நல்ல சான்ஸ்.
இனி அடுத்தடுத்து தங்கம், வெள்ளியில் நிலையற்றத் தன்மை அதிகம் இருக்கும். இந்த வாய்ப்பை டிரேடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தங்கம் என்பது பவுனுக்கு ரூ.1.34 லட்சம் சென்ற நாள்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இப்போது ரூ.1.05 லட்சத்திற்கு இறங்கியுள்ளது.