Tamilnadu
oi-Vigneshkumar
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசுகிறார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நேற்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார். அப்போது விஜய் அரசு மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் இன்று உரிய பதிலை அளிப்பார் என தெரிகிறது.


சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது!
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் பதிலுரை! ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், முதல்வர் விஜய் அதற்கு பதிலளிக்கவுள்ளார்.