Teejay: “அதை அவர் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்!” – டீஜே பேட்டி |teejay-clarifies-pragathi-royalty-controversy-sends-legal-notice

Spread the love

நடிகர் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர் டீஜே இசையில் “தேன் குடிக்க 404′ பாடல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் பின்னணிப் பாடகி பிரகதி, டீஜேவுடன் தான் சேர்ந்து பாடிய பாடல்களுக்குப் ராயல்டி தொகை கொடுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து டீஜே, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார். ‘தேன் குடிக்க 404’ பாடலுக்காக டீஜேவைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்டோம்.

நம்மிடையே பேசுகையில், “எங்களது கூட்டணி 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. 2016-ல் நாங்கள் வெளியிட்ட மியூசிக் வீடியோ மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாங்கள் நட்பாகத்தான் இருந்தோம். 2018-ஆம் ஆண்டு ‘நகிலா நகிலா’ பாடல் வெளியான பிறகே, முதன்முறையாகப் பேமெண்ட் குறித்துக் கேட்டார். அப்போது படப்பிடிப்பில் இருந்ததால், ‘போனில் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூறினேன்.

அதன்பிறகு 2025 மே மாதம் வரை அவர் இது குறித்துப் பேசவே இல்லை. ஆனால், 2025-ல் திடீரென ‘நகிலா நகிலா’ பாடலோடு சேர்த்து ‘தேன் குடிக்க’ பாடலுக்கும் பேமெண்ட்டும், ஸ்ப்ளிட் ராயல்டியும் வேண்டும் எனக் கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *