அந்த நபரை கைது செய்ய முயன்றபோது அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர் போலீஸார் மீது மூன்று முறை சுட்டார். இதையடுத்து, போலீஸார் அவரது வலது காலில் சுட்டு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆசிஃப் எனவும், ஓக்லா மண்டியில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது.
மூன்று பேருக்கும் எதிராக போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
10 நாளில் 4 சிறுமிகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை
டெல்லியில் கடந்த 10 நாட்களில் 4 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில், மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரால் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து 16ம் தேதி வடக்கு டெல்லியின் சதார் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில், 6-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 21ம் தேதி மத்திய டெல்லியின் கிஷன் கஞ்ச் பகுதியில் 34 வயது நபர் ஒருவரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கல்காஜி பூங்காவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.