TN Budget: “5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்”- தங்கம் தென்னரசு | thangam thennarasu about TN Budget 2026

Spread the love

தவெக அரசு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெக-வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு பட்ஜெட்

தமிழ்நாடு பட்ஜெட்

நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன். நிதித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியிருக்கிறார்.

தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *