Train: "இந்த மாதிரி விஜய் சேதுபதியைப் பார்த்ததில்லனு சொன்னாங்க"- 'ட்ரெயின்' பற்றி இயக்குநர் மிஷ்கின்

Spread the love

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் புரொமோஷனுக்காக ட்ரெயின் வடிவில் ஒரு வாகனத்தைத் தயார் செய்து, அதனை தமிழகத்தின் முக்கியப் பகுதிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. அதனைத் துவக்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி - ட்ரெயின்
விஜய் சேதுபதி – ட்ரெயின்

அந்த நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில், “ரொம்ப நீண்ட பயணத்துக்கு அப்புறம் எங்க ட்ரெயின் கிளம்பப் போகுது. இந்தப் படத்தில மட்டுமில்ல, ரியல் லைஃப்லையும் எனக்கு ஒரு கதையின் நாயகன் விஜய் சேதுபதி.

அந்தத் தம்பி இந்தப் படத்தில பணிபுரிந்தது, அவர்கூட நான் பணிபுரிந்தது ஒரு இமயமலையைக் கட்டி அப்படியே ட்ரெயினுக்குள்ள வச்ச மாதிரி இருந்துச்சு.

நேத்து நிறைய டைரக்டர்ஸ்லாம் படம் பார்த்துட்டு, இந்த மாதிரி ஒரு விஜய் சேதுபதிய நாங்க பார்த்ததே இல்லைனு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்தப் படத்துல அவ்வளவு கஷ்டப்பட்டு தம்பி நடிச்சான்.

நான் 30 வருஷமா சினிமாவுல இருக்கேன். இந்த மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவர் தமிழ் ஆக்டர் மட்டுமில்ல, இந்தியன் ஆக்டர் மட்டுமில்ல, அவர் ஒரு வேர்ல்ட் கிளாஸ் ஆக்டர்!” என்றவர், “ஒரு ட்ரெயினுக்குள்ள வேலை செய்றது அவ்வளவு கஷ்டம்.

இந்தப் படம் வர்றதுக்கு லேட் ஆச்சு. ஆனா எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் இன்னைக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு. அதனால இயற்கையை நான் எப்பவுமே ஆச்சரியமா பார்த்துக்கிட்டே இருக்கேன். எது கொடுத்தாலும் இயற்கையை நான் கையேந்தி வாங்கிக்கிறேன்.

Mysskin Speech
Mysskin Speech

இந்தப் படம் டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ் ஆகுது. இது நல்ல வேகமாக ஓடக்கூடிய, உங்களை நொடிகூட திரும்ப வைக்காத பரபரப்பான த்ரில்லர். என் வாழ்க்கையில, ‘முரட்டு காளை’ படத்துல வர்ற சண்டைக் காட்சியைப் பார்த்து வியந்திருக்கேன். அதை ஜூடோ ரத்தினம் பண்ணியிருப்பாரு.

பிறகு, ‘செந்தூரப்பூவே’ படத்துல வர்ற ஃபைட் சீனும் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஆனா அந்த ரெண்டு படத்தையும் இந்தப் படத்தோட சண்டைக் காட்சியில நான் தாண்டியிருக்கேன்னு நினைக்கிறேன். அதுக்குக் காரணம் விஜய் சேதுபதிதான்” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *