Tv update: ‘செகண்ட் லவ்’ ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

Spread the love

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை சென்னையில் வைக்காமல் மும்பையில் நடத்தியது குறித்து டிவி ஏரியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அது குறித்து விசாரித்தபோது,

”டிவி ரியாலிட்டி ஷோக்கள் ஷூட்டிங் செய்ய சென்னையில் இல்லாத வசதி வாய்ப்புகளா? பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. விஜய் டிவி, ஜீ தமிழ் இரண்டின் சீரியல்களுமே ஒரே நேரத்தில் இங்கு ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

பிக்பாஸ் வீடு ஒவ்வொரு வருடமும் இங்குதான் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடக்கிறது. சொல்லப்போனால் மலையாள பிக்பாஸ் செட் கூட கடந்த காலங்களில் இதே இடத்தில் நடந்தது.

இப்படியிருக்க, ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை மும்பையில் நடத்தியதற்குக் காரணம், தேவையற்ற சலசலப்புகள் உருவாகி ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தானாம்” என்கிறார்கள் நிகழ்ச்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலர்.

கடந்த காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தபோது சில அரசியல் கட்சிகள் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தது நினைவிருக்கலாம்.

” `செகண்ட லவ்’ கான்செப்ட்டும் தமிழுக்குப் புதிது என்பதால் நிகழ்ச்சியை முழுவதுமாகப் பார்க்காமலேயே ‘எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என யாராவது கிளம்பி ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பிரச்னை செய்தால்? கடந்த காலத்தில் பிக்பாஸ்க்கு எதிராக இப்படிச் சிலர் கிளம்பி போராட்டம் பண்ணியதை மனதில் வைத்தே, ஷூட்டிங்கை மும்பைக்குக் கொண்டு போய் விட முடிவு செய்தார்களாம்.

ஒளிபரப்பு தொடங்கிய பிறகு எதிர்ப்பு ஏதும் வரவில்லையென்றால் அடுத்தடுத்த சீசன்களை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *