TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' – அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

Spread the love

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் மணல் கொள்ளை மூலம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றன. எவ்வித ஆதாரமும் இல்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை;

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே சில ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் தலைவருக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. மக்கள் ஏற்கனவே தேர்தல்கள் மூலம் அவர்களுக்குரிய பதிலைக் கொடுத்துவிட்டார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மக்கள் சேவைக்காகவும் தொகுதிப் பிரச்னைகளை நேரில் சென்று பார்வையிடவும் அரசு சார்பில் வாகன வசதி செய்து தருவது அவசியமானது. வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் முதல் உள்ளாட்சித் தலைவர்கள் வரை அரசு வாகனம் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் பணியாற்ற அந்த வசதி தேவையாக இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில் எதிர்த்து வாக்களிப்போம் என்று தி.மு.க இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது மற்றும் சுமுகமான சந்திப்புகள் என தி.மு.க ஏற்கனவே பாஜகவின் மறைமுகக் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.

இந்தியாக் கூட்டணியைப் பொறுத்தவரை தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் மட்டுமே இணைந்து முடிவெடுத்து வருகின்றன. தேர்தல் முடிந்து த.வெ.க எம்.பி-க்கள் வெற்றி பெற்ற பிறகு கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *