தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
“அதிமுக-வில் இருந்தவர் இப்போது தடம் மாறிவிட்டாரா?” என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், விளக்கமளித்து ராமராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ” தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற ஏப்ரல்-23 அன்று நடைபெற உள்ள நிலையில் எனது கொள்கை, கோட்பாட்டு வழிகாட்டும் தெய்வங்களாக நான் என்றென்றும் மதிக்கும் இருபெரும் தலைவர்கள் “புரட்சித் தலைவர்- புரட்சித் தலைவி’ என்பதை உலகமே அறியும்.
அவர்களின் புகழைப் காப்பதும், அவர்கள் இட்ட வழியில் நடப்பதுமே என் ஆயுள் முழுவதும் நான் எடுத்துள்ள உறுதிமொழியாகும். காசுக்காகவோ, பதவிக்காகவோ ஒருபோதும் என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன், என் தன்மானம் குறைய இடம் தர மாட்டேன் என்ற போதும்….
இத்தேர்தலில் என் சொந்த ஊரான மதுரை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் என் திரையுலக வாழ்வைத் தொடங்கக் காரணமான ஆரம்பகால தியேட்டர் முதலாளி தெய்வத்திரு. அம்பலகாரர் ஐயா அவர்களின் புதல்வர், மரியாதைக்குரிய அன்புச்சகோதரர் திரு. முருகன் அவர்களுக்கும்