TVK Minister: அன்று விஜய் தலைமையில் திருமணம் இன்று அமைச்சர்! யார் இந்த விஜய் பாலாஜி? – tvk minister Vijay balaji bio update .

Spread the love

ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களம் கண்டு வெற்றி வாகை சூடியவர் விஜய் பாலாஜி. விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

யார் இந்த விஜய் பாலாஜி?

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் பாலாஜிக்கு வயது 39. மனைவி, குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பி.காம் பட்டதாரியான இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

அமைச்சர் விஜய் பாலாஜி

அமைச்சர் விஜய் பாலாஜி

விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தில் தொடங்கி 25 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறார். 2007 – ம் ஆண்டு ஈரோட்டில் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை இவரே செய்திருந்தார். 2010- ம் ஆண்டு விஜய் தலைமையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. 2025 – ம் ஆண்டு ஜனவரி 24- ம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். சந்தித்த முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வான விஜய் பாலாஜி, தற்போது அமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *