U19 ஆசியக் கோப்பை: கடைசிப் பந்து வரை ‘த்ரில்’ – பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்று இந்தியா சாதனை! | India U19 Beat Pakistan by 1 Wicket in Last-Ball Thriller to Win 2026 Asia Cup

Spread the love

338 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய U19 அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றது. எனினும், கடைசி விக்கெட்டில் மோஹித் உல்வா – சிகுருபதி வெங்கடா இணை காட்டிய ஆட்டத்தால், பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 U19 ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

பாகிஸ்தானின் பேட்டிங் ஆதிக்கம்

ஓமனின் அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் ஹயாம் கான் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், உஸ்மான் கான் – அப்துல் காதிர் இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக அமைந்தது.

உஸ்மான் கான் 111 பந்துகளில் 107 ரன்களும், அப்துல் காதிர் 54 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 60 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் காவ்யா படேல் 4 விக்கெட்டுகளையும், சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அர்ஜுன் ராஜ்புத் ஒரு விக்கெட் எடுத்தார்.

இலக்கை நோக்கி இந்தியா

338 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆர்யவீர் சேவாக் – கேப்டன் லக்ஷ்யா ராய்சந்தானி இணை தொடக்கத்தைத் தந்தது. ஆர்யவீர் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய லக்ஷ்யா 101 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

ஆனால், தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்ததுடன் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிந்தன. வி.கே. வினீத் 24 ரன்களும், அன்வய் டிராவிட் 19 ரன்களும் எடுத்தனர். அர்ஜுன் ராஜ்புத், யஷ்வர்தன் சௌஹான், ஆர்யன் சாவ்ஸானி உள்ளிட்டோர் பெரிய ரன்களைச் சேர்க்கத் தவறினர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு மனல் சௌஹான் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து, அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆனால், 309 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *