UPSC/TNPSC குரூப் – 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் king makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவச பயிற்ச்சி வகுப்பை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.
“நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவச பயிற்சி முகாம் வருகிற மே 17ம் தேதி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடக்க இருக்கிறது.
அதனுடன் ஒரு வருட இலவச பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இதில் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், திரு E. சுந்தரவதனம் இ.கா.ப., மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.
அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியாளர் – king makers IAS அகாடமி), கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.
இந்நிலையில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் E. சுந்தரவதனம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்னோட சொந்த ஊர். அப்பா அரசு பள்ளி ஆசிரியர், அம்மா அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.