தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேசும்போது, “இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது.

இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது, அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள். ஆனால் இந்த உலகத்தில், நாட்டில் சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.. மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்(விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?