‘எனக்கு வேலை கொடுங்கள்!’ – வடிவுக்கரசி உருக்கம் |Vadivukkarasi’s Emotional Speech at Con City 25th Day Event

Spread the love

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் “கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, “இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். ஆனால், நான் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

அந்த நிகழ்வில் அவர், “‘கான் சிட்டி’ திரைப்படம் வெற்றி பெற்று 25-வது நாளை எட்டியிருக்கிறது. நான் பொதுவாக யூடியூப் அதிகமாகப் பார்ப்பதில்லை. அந்தக் காணொளியில் ஒருவர், ‘படம் நல்லா இருந்தா மட்டும் போவோம்’ என்று நினைத்த ஒரு யூடியூப் விமர்சகர், படத்தைப் பார்த்துவிட்டு ‘வெளியிலேயே வர மனமில்லாத அளவுக்குப் படம் அவ்வளவு சுவாரசியமாக இருந்தது’ என்று பாராட்டியிருந்ததைப் பார்த்தேன்.

‘அருணாச்சலம்’ படத்திற்குப் பிறகு, ‘வடிவுக்கரசி அம்மா இதில் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்று பலரும் பாராட்டுவதைப் படிக்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

அதேவேளையில், உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ‘வடிவுக்கரசி, யோகி பாபு நன்றாக நடித்திருக்கிறார்கள்’ என்று யூடியூபில் பாராட்டும் நீங்கள், ‘இவர்களுக்கு மேலும் வாய்ப்புகளும் வேலைகளும் கொடுங்கள்’ என்று ஏன் எழுதுவதில்லை? அந்தக் காலத்தில் நாளிதழ்களில் ‘இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று ஒரு வரி எழுதுவார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *